செய்திகள்

வியாழன், 20 அக்டோபர், 2011

இணையத்தளத்தில் ஏற்ப்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் 

நிருவாகம் 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி



  
 கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஒரு அணிக்கு ஏழுபேர் கொண்ட 'நொக் அவுட்' முறையிலான மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த 15 கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு  வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர் மோதிக் கொண்டனர்.  


இச்சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற மூன்றாம் தர அணியினரை தெரிவு செய்யும் அணிகளுக்கிடையிலான போட்டியும் இம்மைதாணத்திலே இடம் பெற்றது. மருதமுனை ஆசனல் அணியினரை எதிர்த்து அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மோதி 05 - 01 என்ற ரீதியில் அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மூன்றாம் தரத்திற்கு தெரிவாகினர்

இறுதியாக நடைபெற்ற வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர்களுக்கிடையிலான போட்டியில் வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினர் 02- 01 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சம்பியனானது.

கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கொழும்பு தலைமைக் காரியாலய சட்டப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்) பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.ஏ. பஸீர்இ மர்ஹ'ம் பழீல் சேரின் புதல்வர் பழீல் நிகாப்இ மற்றும் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்தியர் எம்.சீ. முஹம்மட் யுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதோடு ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை  விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி பாராளுமன்ற அலுவல்கள் பிரிவின் மொழி பெயர்ப்பாளர் லெப்டினன் கே.எம். தமீம் ஆகீயோர் சிறப்பு அதிதிகலாகவும் கலந்து சிறப்பித்தனர்.








ஞாயிறு, 31 ஜூலை, 2011

நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி கோவிலிலும் தேர்தல்


சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் ஆதரவாளர்களாலும் பொது மக்களின் நம்பிக்கைக்கு விரோதமானவர்களாலும் கடந்த 15 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வந்த நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிருவாகசபை தேர்தலை எதிர்ரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் கல்முனை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் நடத்துமாறு கல்முனை மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிருவாகப் பொறுப்பு தொடர்பாக கடந்த ஜந்து வருடங்களாக கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை நீதவான் எம்..இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

1862 ம் ஆணடு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனை கிராமத்தின் ஸ்ரீ கந்தசுவாமி ஆலையத்தை உருவாக்கிய இராமநாதர் ஆறுமுகம். அவரது மனைவி அருணாசலம் பிச்சையம்மா, ஆகியோர் இறந்தபின்னர் ஊர்மக்களால் ஆலயத்திற்கான யாப்பு விதிமுறைகள் எதவுமின்றி ஆளப்பட்டுவந்துள்ளது எனவே 29.07.2011ம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் கல்முனை நீதிமன்றத்தினால் நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான ஆலய யாப்பு விதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ் ஆலயத்தை ஸ்தாபித்தவர்களின் வம்சமோ வழித்தோன்றல்களே எவரும் இல்லையென்பதால் இவ் ஆலயத்தை சட்டவிரோத ஆயுத் குழுக்களும், பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களும் கடந்த காலங்களில் நிருவகித்து வந்துள்ளனர் அவர்களை நீதிமன்றம் கண்டித்து சட்டவிரோத நம்பிக்கை பொறுப்பாளர் சபையாக பிரகடனம் செய்துள்ளது.

எனவே அவர்கள் வசமுள்ள ஆலயத்தின் சகல சொத்துக்களையும் நீதிமன்ற பதிவாளரினால் அமைக்கப்படும் புதிய நிருவாக சபையிடம் நிருவாகம் அமைக்கப்பட்டு இரு வாரகாலத்திற்குள் ஒப்படைக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்ட தினமான ஜீலை 29 ம் திகதியிலிருந்து நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் அனைத்து அசையும் அசையா சொத்துக்களும் பொதுமக்களின் நம்பிக்கை தர்மச் சொத்து என கல்முனை மாவட்ட நீதிமன்றம் பிரகடனம் செய்கின்றது.

மேற்படி நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு ஆலயமுன்றில் செப்டம்பர் 30 ம் திகதிக்கு முன்னர் தெரிவுகள் மாவட்ட நீதிமன்ற பதிவாளர் திருமதி ரி.ஆர்.பரநாதன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

1996 ம் ஆண்டுமுதல் 2002 ம் ஆண்டுவரை இவ் ஆலயம் விடுதலைப் புலிகளின் ஆதரவை பெற்றவர்களாலும் அதன் பின்னர் வேறு ஒரு குழுவினராலும் பலாத்தகாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளமையை மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் சுட்டிக்காடிட்டியுள்ளார்.

சனி, 30 ஜூலை, 2011

முன்னோடிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை மாணவனுக்கு தங்கப்பதக்கம்

A.S.Himayun Simhar
சாய்ந்தமருது SEFDA (South Eastern Development Association ) நிறுவனத்தால் இன்று நடாத்தப்பட்ட ஐந்தாம் தர புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட  முன்னோடி பரீட்சையில் நட்பிட்டிமுனையை  சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 182  புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றான்.

இம்மாணவன் அப்துல் சதார்  நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
செப்டா நிறுவனத்தால் நடத்தப்  பட்ட பாராட்டு விழாவில் ஒய்வு பெற்ற மேல் நீதி மன்ற நீதிபதி ஏ.எல்.நூருல் மைமுனா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மாணவனுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தார்.
இம்மாணவனை natpiddimunai.com இணையதளமும் வாழ்த்துகிறது

வெள்ளி, 29 ஜூலை, 2011

மர்ஹூம் பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்டம்

கல்முனை உதை பந்தாட்ட சம்மேளனம் ஏற்ப்பாடு செய்த கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹோஊம் ஏ.எல்.எம்.பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று கல்முனை சந்தன்கேணி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நவாஸ் ASP தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவும் பளீல் பவுண்டேசன் தலைவர் ஏ.அப்துல் கபூர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மருதமுனை கழகத்தை எதிர்த்து விளையாடிய நற்பிட்டிமுனை கலகம் ஒரு கொலை அடித்து பளீல் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை செய்துள்ளனர்.

புதன், 27 ஜூலை, 2011

ஊடகவியலாளர்கள் பாராட்டு



கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மருதமுனையை சேர்ந்த பி.எம். எம். ஏ. காதர், நற்பிட்டிமுனையை சேர்ந்த யூ. எம். இஸ்ஹாக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்று (21.07.2011) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்திப் பிரிவின் தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர். எம். ஸாலிஹ் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம். எம். நௌபல், ஏ. ஆர். எம். ஸாலிஹ் ஆகியோர் ஊடகவியலாளர்கள் இருவரையும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம், சான்றதழ் வழங்கி கௌரவிப்பதையும் ஏனைய சமுர்த்தி அதிகாரிகளையும் காணலாம்.

யு.எம்.இஸ்ஹாக் எமது இணையத்தளத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எமது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கல்முனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்கள்கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை மணற்சேனை எம். ஆர். சி (MRC) நிறுவனத்தின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்கள் 16பேர் கடந்த 14.07.2011 ம் திகதி  எம். ஆர். சி நிறுவனத்தின் கல்முனை மணற்சேனை அலுவலகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறுவனத்தின் சமூக சேவை பிரிவின் தலைவர் ஏ. கபூர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற intha நிகழ்வில் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமூக சேவைக்காக பேராசிரியர் கௌரவப்பட்டம் பெற்ற எம். ராஜேஸ்வரன் பிரதேச செயலாளர்களான வி.அழகரத்தினம் எம். எம். நௌபல், கே. லவநாதன் ஆகியோரும் பொறியியலாளர் ஏ. எம். ரிஸ்வி, கே. எல். எம். இஸ்மாயீல், ஐ. எல். அப்துல் பாரி ஆகியோர் ஊடகவியலாளர்களான அலியார் முசம்மில், ஏ. எல். எம். சலீம், வி. ரி. சகாதேவராஜா, எம். ஐ. சம்சுத்தீன், பி. எம். எம். ஏ. காதர், எஸ். பேரின்பராஜா, யு. எம். இஷ்ஹாக், சிறி வேல்ராஜ், எஸ். சிராஜுதீன், எம். சஹாப்தீன், பி.கேதீஸ், ஏ. எஸ். முஜாஹித், எஸ். எம். எம். ரம்ஸான், ஏ. எல். எம். மஜீத், எஸ். துஷ்யந்தன், எம். ஏ. பஜீல் ஆகியோரே கௌரவிக்கப்பட்டவர்.
இதில் எமது  ஊடகவியலாளர்  யு. எம். இஷ்ஹாக்,அவர்களும் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எமது வாழ்த்துக்களை இவருக்கும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 30 ஜூன், 2011

நற்பிட்டிமுனைஅம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

அம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் .

ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா அண்மையில் ஆரம்பமானது


பிரமோற்சவப் பெருவிழாவின் கிரிகைகளை ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்களின் நல்லாசியுடன், ஆலய பிரதமகுரு, உற்சவகுரு. ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.மோஹனாநந்தக் குருக்கள், சிவஸ்ரீ.ப.கு.புவனேசராசாக் குருக்கள், இளஞ்சுடர்.சிவஸ்ரீ.பு.கு.சடாட்சர சர்மா, சிவஸ்ரீ.ந.கேதீஸ்வர சர்மா ஆகியோர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

செவ்வாய், 14 ஜூன், 2011

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய  மாணவத் தலைவர்களுக்கான  நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா என்பன இன்று கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. 
கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பிரதம அதிதியாகவும் ,கல்முனை  போலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.ஐ.வாஹிட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர் 
கடந்த காலத்தில் சீரழிந்த இப்பாடசாலை எனது காலத்தில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் .அதற்க்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .எமது பாடசாலைக்கு  இருந்து வரும் அவப் பெயர் நீங்க வேண்டும்.








கடந்த காலத்தில் பொத்துவில்  தொடக்கம் மருதமுனை வரைக்கும் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய சாதனை கள்  பறை சாற்றப்பட்டுள்ளது. இவ்வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் என அதிபர்  கயூம் கூறினார்.

வியாழன், 2 ஜூன், 2011

உரிமை கோராத அறிவிப்பு

இன்று நற்பிட்டிமுனை பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளில் ஒலிபரப்பு செயப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற அறிவிப்புக்கு யாரும் உரிமை கோரப்படவில்லை . நற்பிட்டிமுனை 03 ஆம் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணி இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்கான கூட்டம் சனிகிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெறவிருப்பதாகவும் 80 %மானவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தி என்ன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,இதற்க்கு யார் பொறுப்பு என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.நெல்சிப் திட்டத்தில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளதை மூடி மறைக்க சதி திட்டம் இடம்பெற்றுள்ளதா ?  என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

செவ்வாய், 17 மே, 2011

திங்கள், 16 மே, 2011

நட்பிட்டிமுனையில் தொடரும் குடி நீர் பிரச்சினை

நற்பிட்டிமுனை பிரதேசத்தில் குடி நீர் வழங்குவதில் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை பொடு போக்குடன் செயல் படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு வேளையில் மாத்திரம் குடிநீரை வழங்கும் அதிகார சபை  குறைந்தளவு நீரை  வழங்குவதால் உயரமான பகுதியை சேர்ந்த ஆலயடி பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் குடி நீர் கூட முறையாக வழங்கப்படுவதில்லை 
பல நாட்கள் நீர்பெறாமல் சிரமப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி கிடைத்த நீர் மீண்டும் இடைநிறுதப்படுவது அம்மக்களின் ஆவேசத்தை  தூண்டும் செயலாகும்.

நற்பிட்டிமுனையில் அனுமதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுகின்றன

 
நற்பிட்டிமுனையில் அனுமதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுகின்றன
நற்பிட்டிமுனை பிரதேச குளக்கட்டுகள், மேட்டுவட்டை போன்ற பிரதேசங்களில் அனுமதியற்ற முறையில் மாடுகள் அறுக்கப்படுவதாலும், அதன் கழிவுகள் அவ்விடத்திலேயே கைவிடப்படுவதாலும் அண்மித்துள்ள குடியிருப்பாளர்கள் பல்வேறு இன்னல்களையும் சுகாதாரச் சீர்கேடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.

அவ்விடத்திலேயே கைவிடப்படும் எலும்பு, தோல், இரத்தம் போன்ற இன்னோரன்ன பொருட்களை நாய், காகம் போன்றவை அருகிலுள்ள கிணறுகள், கோயில்கள் போன்ற இடங்களுக்கு இழுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக இப்பிரதேசத்தின் தூய்மை சீர்துலைந்து வருகின்றது.

பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வனவாசம் இவ் வீதியூடாகவே செல்வது வழக்கமாகும். இவ்வாறான செயல்களினால் தமிழ் மக்கள் தமது ஆண்மீக வழிபாடுகளைச் சீரான முறையில் நிறைவேற்ற முடியாதுள்ளதுடன், தமிழ், முஸ்லிம் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப் படுகின்றது.

ஆகையால் கல்முனை மாநகர சபை முதல்வர், கல்முனைப் பொலிசார், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் அனுமதியற்ற முறையில் மாடு அப்பதைத் தடுத்து நிறுத்தி அப்பிரதேச குடியிருப்பளர்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கோடுகளைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேச பொது மக்களால் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 மே, 2011

அபிவிருத்தியில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு

பொருளாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும்  நெல்சிப்  திட்டத்தில் கல்முனை ,சாய்ந்தமருது,மருதமுனை, இஸ்லாமாபாத்,சேனைகுடி, அடங்கலாக ஐந்து  அபிவிருத்தி திட்டங்களுக்கு  நிதி ஒதிக்கீடு செயப்பட்டுள்ளது  இந்த அபிவிருத்தியில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளது, இந்த புறக்கணிப்பு கல்முனை மாநகர சபையினால் செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, நட்பிட்டிமுனையை சேர்ந்த மூன்று  மாநகர சபை உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை வாக்களித்த மக்கள்தான் கேட்க வேண்டும்.

ஞாயிறு, 1 மே, 2011

மின்னல் தாக்கி நற்பிட்டிமுனை வாசி காயம்

இன்று பகல் மின்னல் தாக்கத்திற்குள்ளான நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் ஐந்தாம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான எச்.ஏ.அப்துல் ரகுமான்  கல்முனை அஸ்ரப் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நற்பிட்டிமுனை ஹிஜா கல்வி நிலைய கல்வி சுற்றுலா

நற்பிட்டிமுனை ஹிஜா கல்வி நிலைய கல்வி சுற்றுலாவில் அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர் .நிலைய பொறுப்பாளர் டபிள் யு .ஐயூப்கான் ஆசிரியர் தலைமையில் சென்ற ஆசிரியர்களும் மாணவர்களும் இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற பல முக்கிய இடங்களை பார்வை இட்டனர். இதில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 
நற்பிட்டிமுனை ஹிஜா கல்விநிலையம்  இக்கிராமத்தில் நீண்ட காலமாக கல்வி சேவை  வழங்கி வருவது குறிப்பிட தக்கது.

புதன், 27 ஏப்ரல், 2011

நற்பிட்டிமுனை ஆசிரியருக்கு முதுமாணிப்பட்டம்

நட்பிடிமுனை கிராமத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் அப்துல் கபூர் அசீசா தம்பதிகளின் புதல்வரான ஏ.ஜி.முகம்மது ரிசாத்  இந்திய மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பொது நிருவாக துறையில்  முதுமாணி பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்து உயர் சித்தியான வகுப்பு நிலை சித்தியெய் பெற்றுள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் கல்விகற்ற இவர் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தொடர்பான  தேசிய போதனாவியல் டிபுளோமாவை பூர்த்தி செய்து அதில் மெரிட் சித்தி பெற்றுள்ளார். அத்துடன் அப்பல்கலை கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து  2008 இல் உயர் நிலை சித்தி பெற்றவர்களில் ஐவரும் ஒருவராவார். 
தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறியை  பயின்று வரும் இவர்  தற்போது நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.

விளையாட்டு கழகத்திற்கு உதவி

 நற்பிட்டிமுனை விளையாட்டு கழகத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் தனது சொந்த நிதியில்  உதவிவழங்கினார் .

நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை மாணவர்களுக்கு உதவி

நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.முபீத் சொந்த நிதியில் இருந்து பன்னிரெண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்தார்.
இவ்வைபவம்  பாடசாலை அதிபர் திருமதி யு.எல்.ஹபீலா தலைமையில் நடைபெற்றது .