செய்திகள்

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி



  
 கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஒரு அணிக்கு ஏழுபேர் கொண்ட 'நொக் அவுட்' முறையிலான மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த 15 கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு  வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர் மோதிக் கொண்டனர்.  


இச்சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற மூன்றாம் தர அணியினரை தெரிவு செய்யும் அணிகளுக்கிடையிலான போட்டியும் இம்மைதாணத்திலே இடம் பெற்றது. மருதமுனை ஆசனல் அணியினரை எதிர்த்து அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மோதி 05 - 01 என்ற ரீதியில் அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மூன்றாம் தரத்திற்கு தெரிவாகினர்

இறுதியாக நடைபெற்ற வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர்களுக்கிடையிலான போட்டியில் வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினர் 02- 01 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சம்பியனானது.

கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கொழும்பு தலைமைக் காரியாலய சட்டப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்) பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.ஏ. பஸீர்இ மர்ஹ'ம் பழீல் சேரின் புதல்வர் பழீல் நிகாப்இ மற்றும் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்தியர் எம்.சீ. முஹம்மட் யுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதோடு ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை  விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி பாராளுமன்ற அலுவல்கள் பிரிவின் மொழி பெயர்ப்பாளர் லெப்டினன் கே.எம். தமீம் ஆகீயோர் சிறப்பு அதிதிகலாகவும் கலந்து சிறப்பித்தனர்.








வெள்ளி, 29 ஜூலை, 2011

மர்ஹூம் பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்டம்

கல்முனை உதை பந்தாட்ட சம்மேளனம் ஏற்ப்பாடு செய்த கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹோஊம் ஏ.எல்.எம்.பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று கல்முனை சந்தன்கேணி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நவாஸ் ASP தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவும் பளீல் பவுண்டேசன் தலைவர் ஏ.அப்துல் கபூர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மருதமுனை கழகத்தை எதிர்த்து விளையாடிய நற்பிட்டிமுனை கலகம் ஒரு கொலை அடித்து பளீல் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை செய்துள்ளனர்.

புதன், 27 ஏப்ரல், 2011

விளையாட்டு கழகத்திற்கு உதவி

 நற்பிட்டிமுனை விளையாட்டு கழகத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் தனது சொந்த நிதியில்  உதவிவழங்கினார் .

சனி, 18 டிசம்பர், 2010

நற்பிட்டிமுனையில் வீறுநடைபோடும் ஹீறோ விளையாட்டுக் கழகம்

நற்பிட்டிமுனையில் 1983 ஆம் ஆண்டு மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்த “ஹீறோ விளையாட்டுக் கழகம் மீண்டும் 27 வருடங்களின் பின்னர் நற்பிட்டிமுனைக் கிராமத்தின் இளைஞர்கள் மத்தியில் கரப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்குடனும், கடந்த ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் வகையிலும், கழகத்தில் உறுப்பினர்களாக இருந்து உயிர் நீத்த மர்ஹ¥ம்களான ஏ.எல். அகமட்லெவ்வை, வீ.ரி. சலீம்கான், கே. ஏ. மஜீது ஆகிய மூவரின் ஞாபகார்த்தமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் நற்பிட்டிமுனை அஷ்ரஃப் சதுக்க மைதானத்தில் நடைபெற்றது.
ஒரு அணிக்கு 4 பேர்களைக் கொண்ட இப்போட்டியில் 40 கழகங்கள் பங்கு கொண்டன. இதில் பாண்டிருப்பு விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இதேவேளை நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் சுதந்திரன் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும், சென்றல்கேம்ப் 11 ஆம் கிராமம் கிaன்லைட் விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட பாண்டிருப்பு விளையாட்டு கழகத்திற்கான 7000 ரூபா பெறுமதியான காசோலையை சமூக சேவையாளர் எஸ். வாஹிட்டும், இரண்டாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சுதந்திரன் விளையாட்டுக் கழகத்திற்கான 5000/= ரூபா பெறுமதியான காசோலையை சமூக சேவையாளர் எம். சவாஹிரும், மூன்றாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கிaன்லைட் விளையாட்டுக் கழகத்திற்கான 3000/= ரூபா பெறுமதியான காசோலயை சமூக சேவையாளர் ஏ.எம். நஜிமுதீனும் வழங்கி வைத்தனர்.
இதேவேளை ஹீறோ விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் கே. ஏ. றiட், உறுப்பினர்களான கே. சந்திரசேகரன், கே. றஷாக், பீ. ரி. அப்துர் ரஹ்மான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
ஹீறோ விளையாட்டுக்கழகம் விளையாட்டை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படும் ஒரு கழகம் அல்ல என்பதனை அதன் சமூக சேவையிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படையில் நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு சுற்றுமதில், அஷ்ரஃப் சதுக்க மைதானத்தை பெற்றுக் கொள்வதிலும், மண் நிரப்பும் பணியிலும் பாரிய பங்களிப்பு, சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் கிராமோதய சபை தலைவர் மர்ஹ¥ம் எல். உதுமாலெவ்வையின் ஞாபகார்த்தமாக பயணிகள் பஸ் தரிப்பிடம், நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பாக வழங்கியது போன்ற சமூக சேவைகளை செய்து நற்பிட்டிமுனையிலுள்ள ஏனைய அ¨மைப்புக்களுக்கு எடுத்துக் காட்டான கழகமாக இக்கழகம் செய்யப்பட்டு வருகின்றது மாத்திரமல்ல இன ஐக்கியத்தை வளர்ப்பதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.