செய்திகள்

புதன், 27 ஏப்ரல், 2011

நற்பிட்டிமுனை ஆசிரியருக்கு முதுமாணிப்பட்டம்

நட்பிடிமுனை கிராமத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் அப்துல் கபூர் அசீசா தம்பதிகளின் புதல்வரான ஏ.ஜி.முகம்மது ரிசாத்  இந்திய மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பொது நிருவாக துறையில்  முதுமாணி பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்து உயர் சித்தியான வகுப்பு நிலை சித்தியெய் பெற்றுள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் கல்விகற்ற இவர் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தொடர்பான  தேசிய போதனாவியல் டிபுளோமாவை பூர்த்தி செய்து அதில் மெரிட் சித்தி பெற்றுள்ளார். அத்துடன் அப்பல்கலை கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து  2008 இல் உயர் நிலை சித்தி பெற்றவர்களில் ஐவரும் ஒருவராவார். 
தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறியை  பயின்று வரும் இவர்  தற்போது நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.

விளையாட்டு கழகத்திற்கு உதவி

 நற்பிட்டிமுனை விளையாட்டு கழகத்திற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் தனது சொந்த நிதியில்  உதவிவழங்கினார் .

நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை மாணவர்களுக்கு உதவி

நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.முபீத் சொந்த நிதியில் இருந்து பன்னிரெண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்தார்.
இவ்வைபவம்  பாடசாலை அதிபர் திருமதி யு.எல்.ஹபீலா தலைமையில் நடைபெற்றது .

நற்பிட்டிமுனை உத்தியோகருக்கு பாராட்டு

கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தராக 32 வருடம் சேவையாற்றி ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை அல்- ஹாஜ்  எஸ்.இஸ்மாயில் jp  பாராட்டி கௌரவிக்கப்பட்டார் . 
நற்பிட்டிமுனை MRC நிறுவன சமுக சேவை பிரிவு ஏற்ப்பாடு செய்த இப்பாராட்டு விழா MRC நிறுவன சமுக சேவை பிரிவு பொறுப்பாளர் ஏ.அப்துல் கபூர்  தலைமையில் கல்முனை கால் நடை வைத்தியர் காரியாலயத்தில் நடை பெற்றது . 
MRC நிறுவன அதிபர் கலாநிதி எம்.ராஜேஸ்வரன் ஓய்வு பெற்ற கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தரான அல்- ஹாஜ்  எஸ்.இஸ்மாயிலை பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தார். 
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.ஜுனைத் அவர்களும் கல்முனை கால்நடை வைத்தியர் டாக்டர் திருமதி எஸ்.குகேந்திரன்  சிறப்பு அதிதியாகவும் ,மற்றும் தமிழ் ,முஸ்லிம் புத்தி ஜீவிகளும் கலந்து சிறப்பித்தனர்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மே 31ம் திகதிக்கு முன் தேர்தல்


இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நடத்தப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2009ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் மே 31ம் திகதிக்குப் பின்னர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படக் கூடுமென நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கல்முனை அஸ்ரப் ஆஸ்பத்திரியில் இரத்த தானம்

கல்முனை அஸ்ரப் ஆஸ்பத்திரியில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடை பெற்றது . இதன் பொது  நட்பிட்டிமுனையை சேர்ந்த தாதி உத்தியோகத்தர் இஸ்மா லெப்பே  இர்பான் மற்றும் ஊடகவியலாளர் உமறுகதா முஹம்மது இஸ்ஹாக் ஆகியோர் இரத்த தானம் செய்தனர். இந்த வைபவத்தில் ஹரீஸ் எம்.பி பிரதம 
 அதிதியாக கலந்து கொண்டார்.





நாவிதன்வெளி பிரதேச கலாச்சார விழாவில் நற்பிட்டிமுனை ஊடக வியலாளர் இருவருக்கு பாராட்டு

நாவிதன்வெளி பிரதேச கலாச்சார விழாவில் நற்பிட்டிமுனை  ஊடக வியலாளர்  களான  உமறுகத்தா முகமது இஸ்ஹாக் மற்றும் அப்துல் சதார் முஜாஹித் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச கலாச்சார விழா கடந்த வெள்ளிக்கிழமை  பிர தேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்ற போதே  இவர்கள் இருவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இவ்வைபவத்தில் பசுமை  எனும் கலாச்சார நூல் வெளியிடப்பட்டது.