நட்பிடிமுனை கிராமத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் அப்துல் கபூர் அசீசா தம்பதிகளின் புதல்வரான ஏ.ஜி.முகம்மது ரிசாத் இந்திய மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் பொது நிருவாக துறையில் முதுமாணி பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்து உயர் சித்தியான வகுப்பு நிலை சித்தியெய் பெற்றுள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் கல்விகற்ற இவர் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிபுளோமாவை பூர்த்தி செய்து அதில் மெரிட் சித்தி பெற்றுள்ளார். அத்துடன் அப்பல்கலை கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 2008 இல் உயர் நிலை சித்தி பெற்றவர்களில் ஐவரும் ஒருவராவார்.
தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறியை பயின்று வரும் இவர் தற்போது நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிகின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக