செய்திகள்

சனி, 19 பிப்ரவரி, 2011

அல்-அக்ஸாவில் தரம் ஒன்று மாணவர்களுக்கு வரவேற்ப்பு

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய  முதலாம் தர மாணவர்களுக்கு வரவேர்ப்பளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி  அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில்  நடை பெற்றது.



    கிழக்குமாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.துல்கர் நயீம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.தௌபீக்  கௌரவ   அதிதியாகவும் ,இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

    மாகான சபை உறுப்பினரின் நிதியில் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள்  வழங்கப்பட்டது, இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

    சனி, 12 பிப்ரவரி, 2011

    நற்பிட்டிமுனை மவ்லவி பங்களாதேஷ் பயணம்

    நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த அகமது  லெப்பே நசீர் கனி மவ்லவி புலமை பரிசு பெற்று ஒரு வார காலத்திற்கு பங்களாதேச நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் கல்முனை அல்-ஹாமியா அரபு கலாசாலையில் மவ்லவி பட்டம் பெற்றவரும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரயாளருமாவார்.
    இவர் இன்று அதிகாலை கட்டு நாயக விமான நிலையத்தில் இருந்து  பயணமானார்.





    சனி, 5 பிப்ரவரி, 2011

    நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால் வீடு வீழ்ந்தது வயோதிப பெண் படு காயம்

    நட்பிட்டிமுனையில்  வெள்ளத்தால் வீடு வீழ்ந்தது வயோதிப பெண் படு காயம் அடைந்து  மட்டக்களப்பு போதனா வைத்திய  சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    நற்பிட்டிமுனை  முதலாம் பிரிவை சேர்ந்த வீடோன்றே வெள்ளத்தால் சரிந்து வீழ்ந்துள்ளது. வீடினுள் உறங்கி கொண்டிருந்த 53 வயதான எஸ்.டி.ஆசிய பீவி என்பவரே படு காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    இச்சம்பவத்தை  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நவ்பல் நேரில் சென்று பார்வை இட்டார்.


    வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

    வெள்ளத்தில் விளையாடும் அரசியல்வாதிகள்

    கல்முனை  மாநகர சபை  தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருக்கும்  வக்கற்ற அரசியல்வாதி ஒருவர் நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி மக்களை திசை திருப்பி அகதிமுகாம் அமைத்து  அகதிகளாக்கி அதில் சுகம் காண எத்தனிக்கிறார்..கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்து நான்கு வருடம் செய்யாத இவர் எதனை சாதிக்கப் போகிறார்.

    புதன், 2 பிப்ரவரி, 2011

    வெள்ளத்தால் வீழ்ந்த பாடசாலை கட்டிடம் புதிதாக நிர்மானிக்கப்படுமா

    வெள்ளத்தால் வீழ்ந்த நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடத்தை மீண்டும் அதே இடத்தில நிர்மாணிக்க வேண்டும் என கிராம மக்கள் கேட்டுள்ளனர். ஐந்து  வகுப்பறைகளை கொண்ட இக்கட்டிடம் சரிந்து வீழ்ந்ததால்  மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.