நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிருவாகப் பொறுப்பு தொடர்பாக கடந்த ஜந்து வருடங்களாக கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை நீதவான் எம்..இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக அவரது தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
1862 ம் ஆணடு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனை கிராமத்தின் ஸ்ரீ கந்தசுவாமி ஆலையத்தை உருவாக்கிய இராமநாதர் ஆறுமுகம். அவரது மனைவி அருணாசலம் பிச்சையம்மா, ஆகியோர் இறந்தபின்னர் ஊர்மக்களால் ஆலயத்திற்கான யாப்பு விதிமுறைகள் எதவுமின்றி ஆளப்பட்டுவந்துள்ளது எனவே 29.07.2011ம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் கல்முனை நீதிமன்றத்தினால் நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான ஆலய யாப்பு விதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
இவ் ஆலயத்தை ஸ்தாபித்தவர்களின் வம்சமோ வழித்தோன்றல்களே எவரும் இல்லையென்பதால் இவ் ஆலயத்தை சட்டவிரோத ஆயுத் குழுக்களும், பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களும் கடந்த காலங்களில் நிருவகித்து வந்துள்ளனர் அவர்களை நீதிமன்றம் கண்டித்து சட்டவிரோத நம்பிக்கை பொறுப்பாளர் சபையாக பிரகடனம் செய்துள்ளது.
எனவே அவர்கள் வசமுள்ள ஆலயத்தின் சகல சொத்துக்களையும் நீதிமன்ற பதிவாளரினால் அமைக்கப்படும் புதிய நிருவாக சபையிடம் நிருவாகம் அமைக்கப்பட்டு இரு வாரகாலத்திற்குள் ஒப்படைக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்ட தினமான ஜீலை 29 ம் திகதியிலிருந்து நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் அனைத்து அசையும் அசையா சொத்துக்களும் பொதுமக்களின் நம்பிக்கை தர்மச் சொத்து என கல்முனை மாவட்ட நீதிமன்றம் பிரகடனம் செய்கின்றது.
மேற்படி நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு ஆலயமுன்றில் செப்டம்பர் 30 ம் திகதிக்கு முன்னர் தெரிவுகள் மாவட்ட நீதிமன்ற பதிவாளர் திருமதி ரி.ஆர்.பரநாதன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
1996 ம் ஆண்டுமுதல் 2002 ம் ஆண்டுவரை இவ் ஆலயம் விடுதலைப் புலிகளின் ஆதரவை பெற்றவர்களாலும் அதன் பின்னர் வேறு ஒரு குழுவினராலும் பலாத்தகாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளமையை மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் சுட்டிக்காடிட்டியுள்ளார்.









