கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தராக 32 வருடம் சேவையாற்றி ஓய்வு பெற்ற நற்பிட்டிமுனை அல்- ஹாஜ் எஸ்.இஸ்மாயில் jp பாராட்டி கௌரவிக்கப்பட்டார் .
நற்பிட்டிமுனை MRC நிறுவன சமுக சேவை பிரிவு ஏற்ப்பாடு செய்த இப்பாராட்டு விழா MRC நிறுவன சமுக சேவை பிரிவு பொறுப்பாளர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் கல்முனை கால் நடை வைத்தியர் காரியாலயத்தில் நடை பெற்றது .
MRC நிறுவன அதிபர் கலாநிதி எம்.ராஜேஸ்வரன் ஓய்வு பெற்ற கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தரான அல்- ஹாஜ் எஸ்.இஸ்மாயிலை பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.ஜுனைத் அவர்களும் கல்முனை கால்நடை வைத்தியர் டாக்டர் திருமதி எஸ்.குகேந்திரன் சிறப்பு அதிதியாகவும் ,மற்றும் தமிழ் ,முஸ்லிம் புத்தி ஜீவிகளும் கலந்து சிறப்பித்தனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக