நற்பிட்டிமுனையில் 1983 ஆம் ஆண்டு மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்த “ஹீறோ விளையாட்டுக் கழகம் மீண்டும் 27 வருடங்களின் பின்னர் நற்பிட்டிமுனைக் கிராமத்தின் இளைஞர்கள் மத்தியில் கரப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்குடனும், கடந்த ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் வகையிலும், கழகத்தில் உறுப்பினர்களாக இருந்து உயிர் நீத்த மர்ஹ¥ம்களான ஏ.எல். அகமட்லெவ்வை, வீ.ரி. சலீம்கான், கே. ஏ. மஜீது ஆகிய மூவரின் ஞாபகார்த்தமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் நற்பிட்டிமுனை அஷ்ரஃப் சதுக்க மைதானத்தில் நடைபெற்றது.ஒரு அணிக்கு 4 பேர்களைக் கொண்ட இப்போட்டியில் 40 கழகங்கள் பங்கு கொண்டன. இதில் பாண்டிருப்பு விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இதேவேளை நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் சுதந்திரன் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும், சென்றல்கேம்ப் 11 ஆம் கிராமம் கிaன்லைட் விளையாட்டுக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட பாண்டிருப்பு விளையாட்டு கழகத்திற்கான 7000 ரூபா பெறுமதியான காசோலையை சமூக சேவையாளர் எஸ். வாஹிட்டும், இரண்டாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சுதந்திரன் விளையாட்டுக் கழகத்திற்கான 5000/= ரூபா பெறுமதியான காசோலையை சமூக சேவையாளர் எம். சவாஹிரும், மூன்றாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கிaன்லைட் விளையாட்டுக் கழகத்திற்கான 3000/= ரூபா பெறுமதியான காசோலயை சமூக சேவையாளர் ஏ.எம். நஜிமுதீனும் வழங்கி வைத்தனர்.
இதேவேளை ஹீறோ விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் கே. ஏ. றiட், உறுப்பினர்களான கே. சந்திரசேகரன், கே. றஷாக், பீ. ரி. அப்துர் ரஹ்மான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.ஹீறோ விளையாட்டுக்கழகம் விளையாட்டை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படும் ஒரு கழகம் அல்ல என்பதனை அதன் சமூக சேவையிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படையில் நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு சுற்றுமதில், அஷ்ரஃப் சதுக்க மைதானத்தை பெற்றுக் கொள்வதிலும், மண் நிரப்பும் பணியிலும் பாரிய பங்களிப்பு, சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் கிராமோதய சபை தலைவர் மர்ஹ¥ம் எல். உதுமாலெவ்வையின் ஞாபகார்த்தமாக பயணிகள் பஸ் தரிப்பிடம், நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பாக வழங்கியது போன்ற சமூக சேவைகளை செய்து நற்பிட்டிமுனையிலுள்ள ஏனைய அ¨மைப்புக்களுக்கு எடுத்துக் காட்டான கழகமாக இக்கழகம் செய்யப்பட்டு வருகின்றது மாத்திரமல்ல இன ஐக்கியத்தை வளர்ப்பதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக