இன்று நற்பிட்டிமுனை பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளில் ஒலிபரப்பு செயப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற அறிவிப்புக்கு யாரும் உரிமை கோரப்படவில்லை . நற்பிட்டிமுனை 03 ஆம் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணி இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்கான கூட்டம் சனிகிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெறவிருப்பதாகவும் 80 %மானவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தி என்ன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,இதற்க்கு யார் பொறுப்பு என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.நெல்சிப் திட்டத்தில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளதை மூடி மறைக்க சதி திட்டம் இடம்பெற்றுள்ளதா ? என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக