கல்முனை உதை பந்தாட்ட சம்மேளனம் ஏற்ப்பாடு செய்த கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹோஊம் ஏ.எல்.எம்.பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று கல்முனை சந்தன்கேணி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நவாஸ் ASP தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவும் பளீல் பவுண்டேசன் தலைவர் ஏ.அப்துல் கபூர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
வெள்ளி, 29 ஜூலை, 2011
மர்ஹூம் பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்டம்
புதன், 27 ஜூலை, 2011
ஊடகவியலாளர்கள் பாராட்டு
கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மருதமுனையை சேர்ந்த பி.எம். எம். ஏ. காதர், நற்பிட்டிமுனையை சேர்ந்த யூ. எம். இஸ்ஹாக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்று (21.07.2011) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்திப் பிரிவின் தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர். எம். ஸாலிஹ் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம். எம். நௌபல், ஏ. ஆர். எம். ஸாலிஹ் ஆகியோர் ஊடகவியலாளர்கள் இருவரையும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம், சான்றதழ் வழங்கி கௌரவிப்பதையும் ஏனைய சமுர்த்தி அதிகாரிகளையும் காணலாம்.
யு.எம்.இஸ்ஹாக் எமது இணையத்தளத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எமது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஞாயிறு, 17 ஜூலை, 2011
கல்முனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்கள்கௌரவிக்கப்பட்டனர்.
கல்முனை மணற்சேனை எம். ஆர். சி (MRC) நிறுவனத்தின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர்கள் 16பேர் கடந்த 14.07.2011 ம் திகதி எம். ஆர். சி நிறுவனத்தின் கல்முனை மணற்சேனை அலுவலகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிறுவனத்தின் சமூக சேவை பிரிவின் தலைவர் ஏ. கபூர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற intha நிகழ்வில் இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமூக சேவைக்காக பேராசிரியர் கௌரவப்பட்டம் பெற்ற எம். ராஜேஸ்வரன் பிரதேச செயலாளர்களான வி.அழகரத்தினம் எம். எம். நௌபல், கே. லவநாதன் ஆகியோரும் பொறியியலாளர் ஏ. எம். ரிஸ்வி, கே. எல். எம். இஸ்மாயீல், ஐ. எல். அப்துல் பாரி ஆகியோர் ஊடகவியலாளர்களான அலியார் முசம்மில், ஏ. எல். எம். சலீம், வி. ரி. சகாதேவராஜா, எம். ஐ. சம்சுத்தீன், பி. எம். எம். ஏ. காதர், எஸ். பேரின்பராஜா, யு. எம். இஷ்ஹாக், சிறி வேல்ராஜ், எஸ். சிராஜுதீன், எம். சஹாப்தீன், பி.கேதீஸ், ஏ. எஸ். முஜாஹித், எஸ். எம். எம். ரம்ஸான், ஏ. எல். எம். மஜீத், எஸ். துஷ்யந்தன், எம். ஏ. பஜீல் ஆகியோரே கௌரவிக்கப்பட்டவர்.
இதில் எமது ஊடகவியலாளர் யு. எம். இஷ்ஹாக்,அவர்களும் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எமது வாழ்த்துக்களை இவருக்கும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வியாழன், 30 ஜூன், 2011
நற்பிட்டிமுனைஅம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் .
ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா அண்மையில் ஆரம்பமானது
பிரமோற்சவப் பெருவிழாவின் கிரிகைகளை ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்களின் நல்லாசியுடன், ஆலய பிரதமகுரு, உற்சவகுரு. ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.மோஹனாநந்தக் குருக்கள், சிவஸ்ரீ.ப.கு.புவனேசராசாக் குருக்கள், இளஞ்சுடர்.சிவஸ்ரீ.பு.கு.சடாட்சர சர்மா, சிவஸ்ரீ.ந.கேதீஸ்வர சர்மா ஆகியோர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
செவ்வாய், 14 ஜூன், 2011
நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா
நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா என்பன இன்று கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பிரதம அதிதியாகவும் ,கல்முனை போலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.ஐ.வாஹிட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்
கடந்த காலத்தில் சீரழிந்த இப்பாடசாலை எனது காலத்தில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் .அதற்க்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .எமது பாடசாலைக்கு இருந்து வரும் அவப் பெயர் நீங்க வேண்டும்.
வியாழன், 2 ஜூன், 2011
உரிமை கோராத அறிவிப்பு
இன்று நற்பிட்டிமுனை பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளில் ஒலிபரப்பு செயப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற அறிவிப்புக்கு யாரும் உரிமை கோரப்படவில்லை . நற்பிட்டிமுனை 03 ஆம் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணி இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்கான கூட்டம் சனிகிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெறவிருப்பதாகவும் 80 %மானவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தி என்ன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,இதற்க்கு யார் பொறுப்பு என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.நெல்சிப் திட்டத்தில் நற்பிட்டிமுனை புறக்கணிப்பு செயப்பட்டுள்ளதை மூடி மறைக்க சதி திட்டம் இடம்பெற்றுள்ளதா ? என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
செவ்வாய், 17 மே, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















