செய்திகள்

புதன், 14 மார்ச், 2012

நற்பிட்டிமுனை முஅத்தின் காலமானார்

நற்பிட்டிமுனை பள்ளிவாசல்களில் நாட்பதுவருடமாக முஅதினாக கடமை புரிந்த அப்துல் மஜீத்  தனது அறுபத்தி ஏழாவது வயதில் இன்று காலமானார் 

வியாழன், 20 அக்டோபர், 2011

இணையத்தளத்தில் ஏற்ப்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் 

நிருவாகம் 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி



  
 கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஒரு அணிக்கு ஏழுபேர் கொண்ட 'நொக் அவுட்' முறையிலான மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த 15 கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு  வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர் மோதிக் கொண்டனர்.  


இச்சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற மூன்றாம் தர அணியினரை தெரிவு செய்யும் அணிகளுக்கிடையிலான போட்டியும் இம்மைதாணத்திலே இடம் பெற்றது. மருதமுனை ஆசனல் அணியினரை எதிர்த்து அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மோதி 05 - 01 என்ற ரீதியில் அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மூன்றாம் தரத்திற்கு தெரிவாகினர்

இறுதியாக நடைபெற்ற வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர்களுக்கிடையிலான போட்டியில் வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினர் 02- 01 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சம்பியனானது.

கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கொழும்பு தலைமைக் காரியாலய சட்டப்பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்) பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.ஏ. பஸீர்இ மர்ஹ'ம் பழீல் சேரின் புதல்வர் பழீல் நிகாப்இ மற்றும் அம்பாறை மாவட்ட கால்நடை வைத்தியர் எம்.சீ. முஹம்மட் யுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டதோடு ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை  விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி பாராளுமன்ற அலுவல்கள் பிரிவின் மொழி பெயர்ப்பாளர் லெப்டினன் கே.எம். தமீம் ஆகீயோர் சிறப்பு அதிதிகலாகவும் கலந்து சிறப்பித்தனர்.








ஞாயிறு, 31 ஜூலை, 2011

நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி கோவிலிலும் தேர்தல்


சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் ஆதரவாளர்களாலும் பொது மக்களின் நம்பிக்கைக்கு விரோதமானவர்களாலும் கடந்த 15 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வந்த நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிருவாகசபை தேர்தலை எதிர்ரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் கல்முனை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் நடத்துமாறு கல்முனை மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் நிருவாகப் பொறுப்பு தொடர்பாக கடந்த ஜந்து வருடங்களாக கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கான இறுதித் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை நீதவான் எம்..இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

1862 ம் ஆணடு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனை கிராமத்தின் ஸ்ரீ கந்தசுவாமி ஆலையத்தை உருவாக்கிய இராமநாதர் ஆறுமுகம். அவரது மனைவி அருணாசலம் பிச்சையம்மா, ஆகியோர் இறந்தபின்னர் ஊர்மக்களால் ஆலயத்திற்கான யாப்பு விதிமுறைகள் எதவுமின்றி ஆளப்பட்டுவந்துள்ளது எனவே 29.07.2011ம் திகதி முதல் அமுலாகும் வண்ணம் கல்முனை நீதிமன்றத்தினால் நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான ஆலய யாப்பு விதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

இவ் ஆலயத்தை ஸ்தாபித்தவர்களின் வம்சமோ வழித்தோன்றல்களே எவரும் இல்லையென்பதால் இவ் ஆலயத்தை சட்டவிரோத ஆயுத் குழுக்களும், பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களும் கடந்த காலங்களில் நிருவகித்து வந்துள்ளனர் அவர்களை நீதிமன்றம் கண்டித்து சட்டவிரோத நம்பிக்கை பொறுப்பாளர் சபையாக பிரகடனம் செய்துள்ளது.

எனவே அவர்கள் வசமுள்ள ஆலயத்தின் சகல சொத்துக்களையும் நீதிமன்ற பதிவாளரினால் அமைக்கப்படும் புதிய நிருவாக சபையிடம் நிருவாகம் அமைக்கப்பட்டு இரு வாரகாலத்திற்குள் ஒப்படைக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்ட தினமான ஜீலை 29 ம் திகதியிலிருந்து நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் அனைத்து அசையும் அசையா சொத்துக்களும் பொதுமக்களின் நம்பிக்கை தர்மச் சொத்து என கல்முனை மாவட்ட நீதிமன்றம் பிரகடனம் செய்கின்றது.

மேற்படி நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நற்பட்டிமுனை ஸ்ரீ கந்தசாமி ஆலயத்திற்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்வதற்கான அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு ஆலயமுன்றில் செப்டம்பர் 30 ம் திகதிக்கு முன்னர் தெரிவுகள் மாவட்ட நீதிமன்ற பதிவாளர் திருமதி ரி.ஆர்.பரநாதன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

1996 ம் ஆண்டுமுதல் 2002 ம் ஆண்டுவரை இவ் ஆலயம் விடுதலைப் புலிகளின் ஆதரவை பெற்றவர்களாலும் அதன் பின்னர் வேறு ஒரு குழுவினராலும் பலாத்தகாரமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளமையை மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் சுட்டிக்காடிட்டியுள்ளார்.

சனி, 30 ஜூலை, 2011

முன்னோடிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை மாணவனுக்கு தங்கப்பதக்கம்

A.S.Himayun Simhar
சாய்ந்தமருது SEFDA (South Eastern Development Association ) நிறுவனத்தால் இன்று நடாத்தப்பட்ட ஐந்தாம் தர புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட  முன்னோடி பரீட்சையில் நட்பிட்டிமுனையை  சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 182  புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றான்.

இம்மாணவன் அப்துல் சதார்  நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
செப்டா நிறுவனத்தால் நடத்தப்  பட்ட பாராட்டு விழாவில் ஒய்வு பெற்ற மேல் நீதி மன்ற நீதிபதி ஏ.எல்.நூருல் மைமுனா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மாணவனுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தார்.
இம்மாணவனை natpiddimunai.com இணையதளமும் வாழ்த்துகிறது

வெள்ளி, 29 ஜூலை, 2011

மர்ஹூம் பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்டம்

கல்முனை உதை பந்தாட்ட சம்மேளனம் ஏற்ப்பாடு செய்த கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹோஊம் ஏ.எல்.எம்.பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று கல்முனை சந்தன்கேணி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நவாஸ் ASP தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவும் பளீல் பவுண்டேசன் தலைவர் ஏ.அப்துல் கபூர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மருதமுனை கழகத்தை எதிர்த்து விளையாடிய நற்பிட்டிமுனை கலகம் ஒரு கொலை அடித்து பளீல் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை செய்துள்ளனர்.

புதன், 27 ஜூலை, 2011

ஊடகவியலாளர்கள் பாராட்டு



கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மருதமுனையை சேர்ந்த பி.எம். எம். ஏ. காதர், நற்பிட்டிமுனையை சேர்ந்த யூ. எம். இஸ்ஹாக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்று (21.07.2011) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்திப் பிரிவின் தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர். எம். ஸாலிஹ் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம். எம். நௌபல், ஏ. ஆர். எம். ஸாலிஹ் ஆகியோர் ஊடகவியலாளர்கள் இருவரையும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம், சான்றதழ் வழங்கி கௌரவிப்பதையும் ஏனைய சமுர்த்தி அதிகாரிகளையும் காணலாம்.

யு.எம்.இஸ்ஹாக் எமது இணையத்தளத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் எமது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.